Posts

Showing posts from August, 2021

SAVE GREEN BE GREEN

Image
  பசுமை வளம் காப்போம் அன்று , வெட்டப்பட்ட மரங்களை டன் கணக்கில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்காய் ஏற்றி சென்ற கன்டெய்னர்கள் எல்லாம் இன்று , வெளிநாட்டிலிருந்து கொரோனா நிவாரண உதவியாய் இந்தியாவிற்கு இறக்குமதியாகியிருக்கும் ஆக்சிஜன் உருளைகளை (Oxygen Cylinder) சுமந்த வண்ணம் சாலைகளில் காட்சி தருகின்றன . இதைத்தான் காலங்கள் மாறினால் காட்சிகளும் மாறும் என்பார்களோ! என்னவோ! . இயற்கையை நேசிப்பதையும், சுற்றுச்சூழல் மாசுயின்றி பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துச் சொல்ல வீதிகள் தோறும் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பதாகைகளை எட்டிக் கூடப் பார்க்காதவர்கள் , இன்று தங்கள் உயிர்கள் காக்கப்பட எங்கேயாவது ஆக்சிஜன் உருளை கிடைக்குமா? என்கிற விவரத்தை விளம்பர சுவர்களிலும், வலைத்தள திரைகளிலும் தேடி அலைகிறார்கள் . தற்கால சூழலை கவனிக்கும்போது, பசுமை வளங்களின் பயனையும், முக்கியத்துவத்தையும் மனிதனுக்கு பாடமாய் கற்பிக்க இயற்கை முற்படுகிறதோ? என்று எண்ணும் அளவிற்கு இன்றைய நிலை பரிதாப நிலையாய் அமையப் பெற்றிருக்கிறது . இயற்கையின் மகத்துவத்தை அறியாது, சுயநலத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு, நாம் வா