Posts

Showing posts from August, 2022

இறைமாட்சியை வெளிப்படுத்தும் இறையரசுக்குரியோர்

Image
இறைமாட்சியை வெளிப்படுத்தும் இறையரசுக்குரியோர் ( மத்தேயு 21:16) இறையரசுக்குரியோரால் தாவீதின் மைந்தன் என போற்றப்படும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற இனிய நல்நாமத்தை போற்றி , நீதியாய் நியாயம் தீர்க்க வீற்றிருக்கும் நடுவர்களை வணங்கி , என் போன்ற போட்டியாளர்களை வாழ்த்தி , அவையோருக்கும், சபையோருக்கும் வணக்கம் சொல்லி, “ இறைமாட்சியை வெளிப்படுத்தும் இறையரசுக்குரியோர் ” என்னும் தலைப்பில் , என் சிந்தையில் எழுந்த கருத்துகளை திருமறை வெளிச்சத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . இதற்கு ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ள திருமுறைப்பகுதி தூயமத்தேயு எழுதிய நற்செய்தி நூல் 21 - ஆம் அதிகாரம் 16 - ஆம் திருவசனம் . இந்த திருமறை பகுதியில் இறையரசுக்குரியோராய் அடையாளப்படுத்தப் படுகிறவர்கள் பாலகரும், குழந்தைகளுமே . ஆம் ! இவர்களே இறைவனின் பிரதிநிதிகள், குழந்தைகள் இறைவன் கொடுக்கும் வரம் , இவர்களே இறையரசின் பங்காளர்கள் என்பதை மாற்கு 10:14 - இல் சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் ; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள் ; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி ஆண்டவர

மோசே வழியாய் பத்து கற்பனைகள் - The Ten Commandments Through Moses

Image
  மோசே வழியாய் பத்து கற்பனைகள் நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ( கலாத்தியர் 6:9 ) இஸ்ரவேலர்களின் 40 வருட வனாந்திரப் பயணம் கடவுளின் உடன் இருத்தலையும் , இக்கட்டான சூழலில் ஆண்டவர் தங்களை விடுதலையாக்குவார் என்கிற ஆழமான நம்பிக்கையும், கடவுளின் சமூகம் தங்கள் முன்பாக செல்கிறது என்கிற உறுதிப்பாட்டையும் இஸ்ரவேல் வாழ்வில் ஏற்படுத்தியது . அதன் ஒரு நிகழ்வாகவே கடவுள், மோசே வழியாய் இஸ்ரவேலருக்கு கொடுத்த நித்திய காலத்திற்குமான பத்து கற்பனைகள் விளங்குகிறது . அவைகளை பெறுவதற்கான முயற்சிகளில் மோசையின் செயல்பாடு எத்தகையதாக இருந்தது ? அது இஸ்ரேல் வரலாற்றில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தின என்பதனை திருமறை பின்னணியத்தோடு சிந்திப்போம் . புதிய பாதையை உருவாக்குகிறார் மோசே மோசேயை குறித்து சிந்திக்கிற போது, அடிமைத்தன நுகத்தில் தவித்து வந்த இஸ்ரவேலருக்கான நம்பிக்கை தான் மோசே . அவருடைய அழைப்பே இயற்கைக்கும், மனித எண்ணங்களுக்கும் முற்றிலும் எதிர்மறையானது. பொதுவாக நெருப்பில் எரிந்து சாம்பலாகாத அல்லது சேதமடையாத எந்த ஒரு பொருளுமே இருக்க முடியாது