Posts

Showing posts from February, 2022

அனைவருக்கும் சமத்துவமும், நீதியும் - Equality and Justice to all

Image
  அனைவருக்கும் சமத்துவமும் , நீதியும் குடியரசு தினம்                                                                    ( தியான வசனம் : சங்கீதம்: 97:2 ) உலக வரலாற்றில் மன்னர் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி, மக்களாட்சி என்று பல்வேறு விதமான ஆட்சி முறைகள் காணப்படுகின்றன . இதில் மக்களாட்சி முறையே சிறந்தது என்பதை இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் Vincent Churchill- “ மானுடம் கண்டுள்ள ஆட்சி முறைகளில் ஜனநாயக ஆட்சி முறையே குறைந்த தீமைகளை கொண்டுள்ளது ” என்று குறிப்பிடுகிறார் . 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் புதிய அரசியலமைப்பு சட்டங்களுடன் இந்தியா தன்னை ஒரு குடியரசு நாடாக அறிவித்தது. இதனால் , உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு, குடியாட்சி தத்துவத்தை செயல்படுத்தும் நாடு என்ற பெருமை இந்திய நாட்டிற்கு கிடைத்தது . ஏறத்தாழ 350 ஆண்டுகள் அந்நிய ஆட்சியில் கட்டுண்டு கிடந்த ஒரு நாடு ஜனநாயகத்திற்கும், குடியாட்சி தத்துவத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றால் அது பெருமைப்பட வேண்டிய விஷயம் தான் . ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக, மக்களின் ஆட்சி அமைப்பு . மறுபுறம் , தேசத்தில் காணப்படும் வேல

திறந்த திருச்சபை – “சமூகத்திற்கான குரலும், நம்பிக்கையும்” - An Open Church is a Voice and Hope

Image
திறந்த திருச்சபை – “ சமூகத்திற்கான குரலும் , நம்பிக்கையும் ” “ எக்கிளேசியா ” (Ecclesia) என்கிற கிரேக்க சொல் “ திருச்சபை ” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . இதனை “ கூட்டுவிக்கப்பட்ட மக்களின் பொதுக்கூட்டம் ” (Gathering of those Summoned) என்று பொருள் ப் படுத்துகிறார்கள் . கிரேக்கருக்கு இச்சொல் சமய சார்பற்றது . எனவே “ திருச்சபை ” என்றதும் உலகத்தை விட்டு தனியாக பிரிந்திருக்க பொறுக்கி எடுக்கப்பட்ட சிலர் என்று கருதுவது முற்றிலும் தவறு . மாறாக , இவ்வார்த்தை உலகத்தோடு இணைந்து செயல்படும் அழைப்பை, வாழ்வை முன்வைக்கிறது . திருச்சபை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ, சமயத்திற்கோ உரியது அல்ல! இது ஒட்டுமொத்த உலகிற்குமானது . கடவுளால் அழைக்கப்பட்டு, அவரை சந்திக்கவும், அவரது சொல்லைக் கேட்டு நடக்கவும் கூட்டப்பட்ட கூட்டமைப்பே திருச்சபை . நற்செய்தியை அறிவிப்பது மட்டுமே திருச்சபையின் கடமையல்ல, ஏழை , எளியோருடன் தன்னை இணைத்துக்கொண்டு, சமூக மாற்றத்திற்கான நற்செயல்கள் புரிந்த இயேசுகிறிஸ்துவின் மாதிரி வாழ்வினை உலகில் பிரதிபலிக்க செய்யவதே திருச்சபை . திறந்த உலகில் திறந்த திருச்சபையின் பங்களிப்பு

சத்திரம் சிதைந்தது! மாடடை மாளிகையானது!! - CHRISTMAS 2021

Image
சத்திரம் சிதைந்தது! மாடடை மாளிகையானது! !      பெருந்தொற்று என்னும் இருளில் , அமைதியற்ற நிலையில் அமைதியின் அரசராம் , உலகின் பேரொளியாம் இயேசுவை கொண்டாடும் நோக்கில் மானுட உலகு கிறிஸ்து பிறப்பு தினத்திற்கு ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது . திருமறையின் பழைய ஏற்பாட்டு காலம் தொடங்கி , பல காலகட்டங்களில் சமூக கட்டமைப்பு , ஆட்சி , அதிகாரம் , மேலாதிக்கம் போன்றவற்றால் அடிமை வாழ்வில் தவித்து வந்த மக்கள் அத்தகைய சூழலிலிருந்து தங்களை விடுவிக்கும் மேசியாவை எதிர்பார்த்து காத்திருந்தனர் . அதே நிலை இயேசு கிறிஸ்துவின் காலத்திலும் தொடர்ந்தது. தங்களுக்குரிய மேசியா தோன்றுவார் , தற்கால ஆட்சியாளர்களை அகற்றி , பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அதிகாரத்தை பிடிப்பார் , ஆயுதமேந்திப் போராடுவார் , அரண்மனையில் பிறப்பார் என்பன போன்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு அமைதிக்கான அரசரின் பிறப்பின் நிகழ்வே அவர்களின் எதிர்பார்ப்பு முற்றிலும் தவறானது என்பதை சுட்டிக்காட்டும் வண்ணத்தில் அமைந்தது . இதுவரை மக்கள் கண்ட ஆட்சிமாற்றம் பணபலத்தையும் , படைபலத்தையும் அடிப்படையாய் கொண்டிருந்தது . ஆனால் இந்த முறை இயேசு என்னும் மேசி