Posts

Showing posts from April, 2022

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

Image
  பள்ளி ஆண்டுவிழா  வாழ்த்துரை “ கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் ” என்கிற திருவார்த்தையை நினைவில் கொண்டு ,  சிறப்புமிக்க இப்பள்ளியின் ஆண்டுவிழாவில் வாழ்த்துரை வழங்குவதில் பெ ரு ம் மகிழ்ச்சி கொள்கிறேன் . இந்த வாய்ப்பினை நல்கி இருக்கிற பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய இப்பள்ளியின் தாளாளர் , தலைமை ஆசிரியர் , அலுவலக பணியாளர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர் மற்றும் மாணவ மாணவியரை உள்ளத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்தி வணங்குகிறேன் . “மாதா , பிதா , குரு , தெய்வம்” என்பதற்கிணங்க நமது பெற்றோருக்கு அடுத்தபடியாக நம்மை வழிநடாத்துபவர்கள் ஆசிரியர்களே. நல்ல குருவை அடைந்தவர்களே சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவர் என்று சொல்வதுண்டு. நம் பெற்றோர்களுக்கு அடுத்து ஒழுக்கத்தையும், அறிவையும் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பள்ளிக்கூடம் தான் . பல அறிஞர்களையும் , கவிஞர்களையும் , மேதைகளையும் , மருத்துவர்களையும் , விளையாட்டு வீரர்களையும் , சாதனையாளர்களையும் , விஞ்ஞானிகளையும் இந்த உலகிற்கு அறிமுகப் படுத்துவது பள்ளியும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது . இந்த உலகத்

சிலுவை மொழி 5 தாகமாயிருக்கிறேன்- SERMON ON THE CROSS VERSE 5 "I am Thirsty"

Image
  சிலுவை மொழி 5 “ தாகமாயிருக்கிறேன் ” அதன்பின்பு , எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து , வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். (யோவான்: 19:28) இயேசுநாதர் சிலுவையில் மொழித்த ஐந்தாம் திருவார்த்தை “ தாகமாயிருக்கிறேன் ” . இல்வுலகில் உயிருள்ள எல்லா படைப்புகளுக்கும் “ தாகம் ” இயல்பான ஒன்று. தாகம் என்றாலே ஒருவகையான அவஸ்தை தான். DON CARSON என்கிற இறையியலாளர் சொல்லும் போது. “THIRST OF JESUS CHRIST ON THE CROSS WOULD BE A PART OF THE TORTURE” என்கிறார். இயேசு கிறிஸ்துவின் “ தாகமாயிருக்கிறேன் ” திருவார்த்தை கி.பி.முதலாம் நூற்றான்டில் ஒரு தோல்வியின் வார்த்தையாகவே பார்க்கப்பட்டது. v   கடவுளின் தன்மை இயேசுவில் இருந்திருத்தால் அவரின் வாயிலிருந்து இந்த வார்த்தை வந்திருக்காது. காரணம் இவர் கிணற்றின் அருகே சமாரியா பெண்மணிக்கு என்றும் தாகம் எடுக்காத வாழ்வை கொடுத்தவராயிற்றே என்று ஒரு பிரிவார் சொல்லிக் கொண்டிருந்தனர். v   Docetism ( டொசட்டிசம்) : தோற்ற காட்சிக் கொள்கையுடையவர்கள், இவர்கள் கடவுள் பிதாவில் மறைந்திருந்தார், இந்த கடவுள் பாடு மரணத்தின் போது இயேசுவிலிருந்து சென்ற

சிலுவை மொழி 6 “முடிந்தது” - SERMON ON THE CROSS VERSE 6 "It is Finished"

Image
  சிலுவை மொழி - 6 “ முடிந்தது ” இயேசு காடியை வாங்கினபின்பு , முடிந்தது என்று சொல்லி , தலையைச் சாய்த்து , ஆவியை ஒப்புக்கொடுத்தார். ( யோவான் 19:30 ) சிலுவைநாதர் இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஆறாம் பொன்மொழி “ முடிந்தது ” . இந்த வார்த்தை தோல்வியின் வார்த்தையா? அல்லது வெற்றியின் வார்த்தையா? என்கிற விவாதத்தை ஏற்படுத்தும் வார்த்தை . இந்த வார்த்தை சிலுவையில் இயேசுவால் ஏன் சொல்லப்பட்டது? என்கிற பின்னணியத்தை சிந்திப்பதற்கு முன்பு , இந்த “ முடிந்தது ” என்கிற வார்த்தை சிலுவையின் நிழலிலே பல மனிதர்களின் மனதின் நினைவுகளை பிரதிபலிப்பதாக அமையப் பெற்றிருக்கிறது . அந்த நபர்கள் யார்? யார் ? அவர்களின் எண்ணங்களுக்கும் இந்த முடிந்தது என்கிற வார்த்தைக்குமான தொடர்புதான் என்ன என்று சிந்திக்கிற போது ! அந்த வரிசையில் வரும் பிரிவினர் : 1. பிரதான ஆசாரியர் , வேதபாரகர் , பரிசேயர் : தங்கள் சதித் திட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது இனி இயேசு தப்பிக்க வழியில்லை வாய்ப்புமில்லை, நம்மை மாய்மாலக்காரர் என தோலுரித்து , நமக்கு முடிவு கட்ட முயன்றவனின் முயற்சி முடிந்துவிட்டது என்கிற அகந்தையின் சிந்தை