Posts

Showing posts from April, 2023

திருவருட்சாதனங்கள் - Christian Sacraments: An Introduction

Image
  திருவருட்சாதனங்கள் ( Sacraments) Sacrament - “Sacramentum” என்னு ம் லத்தீன் வார்த்தையிலிருந்து பிறந்தது. Secret ( ரகசியம்) , Sacred ( பரிசுத்தம் ) முதலிய வார்த்தைகள் இதனோடு தொடர்புடையவை . படைக்கு தலைமை ஏற்கும் தளபதி முன்பு எடுத்துக் கொள்ளும் இரகசிய காப்புபிரமாணமே “ சாக்கிரமந்து ” . கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் திருவருட்சாதனங்கள் (Sacraments) என்பது கிறிஸ்து நமக்காக செய்தவற்றை , நம் வாழ்வில் உண்மையாக்கி , நம்மை தெளிவான வழியில் நடத்திச் செல்வதற்கு இது வெளி அடையாளங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கவேண்டிய ஆன்மீக கடமையை சித்தரிக்கிறது திருவட்சாதனம். இது உள்ளார்ந்த ஆன்மீக அருளினை குறித்த வெளிப்படையான அடையாளம். “ கடவுளின் கிருபையை நேரடியாக பெற்றுக் கொள்வதின் அடையாளமாக ”- St. அகஸ்டின் கூறுகிறார். வேதத்தில் சாக்கிரமந்து என்னும் சொல் இடம் பெறவில்லை. ரோமன் கத்தோலிக்க (Roman Catholic) சபை 7 திருவருட்சாதனங்களை பின்பற்றுகின்றன : 1. திருமுழுக்கு ( Baptism) 2. திருவிருந்து ( Eucharist) 3. திடப்படுத்துதல் ( Confirmation) 4. திருமணம் ( Marriage) 5. அருட்பொழிவு (

சிலுவை மொழி-1 "மன்னிப்பு" - SERMON ON THE CROSS VERSE 1

Image
  சிலுவை மொழி -1 "மன்னிப்பு" பிதாவே , இவர்களுக்கு மன்னியும் , தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். ( லூக்கா 23 : 34 ). இறைவேண்டல் மன்னிக்கும் தயை கொண்ட தாயும் , தந்தையுமான வல்ல கடவுளே! உம்முடைய பாடு மரணத்தை சிந்திக்கின்ற இந்த நாளை நாங்கள் காணவும், நீர் சிலுவையிலிருந்து மொழிந்த திருவாய்மொழிகளை நாங்கள் தியானிக்க வும் , நீர் எங்களுக்கு வழங்கி இருக்கிற கிருபைகளுக்காக உம்மை நன்றியோடு போற்றுகிறோம் . இப்பொழுது நாங்கள் சிந்திக்க இருக்கின்ற முதலாம் திருவார்த்தை எங்களுக்கு அரு ளா சியை தரட்டும் . பேசுகிற அடியவரை மறைத்து , உம் திருவார்த்தையின் மெய் பொருளை வெளிப்படுத்தும் . தியானிக் கிற எல்லாருடைய இருதயத்தின் சிந்தனைகளும் உம்முடைய சமூகத்தில் ஏற்புடையதாய் இருக்கட்டும் . இவைகளை சிலுவைநாதர் இயேசு கிறிஸ்து வழி நின்று வேண்டுகிறோம் அன்பு கடவுளே ! ஆமென் . முன்னுரை வானாதி வானங்களுக்கு நேராக தம்முடைய பரம சிங்காசனத்திலே வீற்றிருப்பவரும், அதிகாரத்தின் முழு அதிகாரமாய் எம்மை ஆளுகை செய்பவரும், மரணத்தை வென்றவருமான சிலுவைநாதர் இயேசு கல்வாரி சிலுவையிலே

சிலுவை மொழி-2 இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் SERMON ON THE CROSS VERSE 2

Image
  சிலுவை மொழி-2 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். ( லூக்கா 23 : 43 ) He replied, “Truly I tell you, today you will be with me in paradise.” (Luke 23:43) சிலுவைநாதர் இயேசு கிறிஸ்து மொழிந்த இரண்டாம் வார்த்தை “ கள்வனுக்கு பரதீசு வாழ்வு ”. “ பரதீசு ” என்ற வார்த்தை ஒரு பாரசீக சொல் . இதற்கு தரப்படுகிற பொருள் என்னவென்றால் “ வேலியடைக்கப்பட்ட தோட்டம் ”, “ நந்தவனம் ”, “ செழிப்பான தோ ட்ட ம் ” என்பனவாகும் . பாரசீக அரசன் தன்னுடைய விருந்தினர்களை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக பரதீசு என்று பொருள் தரும் தோட்டத்தில் விருந்து கொடுப்பது அக்கால வழக்கமாய் இருந்து வந்திருக்கிறது . இயேசுவும் சிலுவையில் கள்வனை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக பரதீசு வாழ்வை ( வாய்ப்பை ) அவனுக்கு அருளுகின்றார் . திருவிவிலியம் இந்த வார்த்தையை “ பேரின்ப வீடு ” என்று குறிப்பிடுகிறது . ஆக இயேசு கள்வனுக்கு அருளின வாழ்வு , தன்னுடன் இருக்கும் வாழ்வு . பரதீசு என்ற வார்த்தைக்கு பலவிதமான விளக்கங்கள் தரப்பட்டாலும் , அதன் மையம் இயேசுவுடன் இருக்கும்

சிலுவை மொழி 3- ஸ்திரீயே, அதோ, உன் மகன் ... சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் SERMON ON THE CROSS VERSE- 3

Image
                                                                 சிலுவை மொழி 3 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு , தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே , அதோ , உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ , உன் தாய் என்றார் அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். ( யோவான் 19:26-27 ) இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தையை இரண்டாகப் பிரிக்க முடியும் : v 1 முதல் 3 பிறருக்கான வேண்டுதல். v 4 முதல் 7 தனக்கான வேண்டி கொள்ளுதல் . இந்த மூன்றாம் திருவார்த்தை இயேசு கிறிஸ்து பிறருக்காக வேண்டிக் கொண்ட கடைசி வார்த்தை . இது “ பராமரிப்பின் வார்த்தை ” அல்லது “ உறவை புதுப்பிக்கும் வார்த்தை ” எனவும் சொல்லலாம் . கொடும் சிலுவையிலே தன்னுடைய வாழ்வை வெறுமையாக்கி மானிட மீட்புக்காக தன்னைத் தானே ஒப்புக்கொடுத்த தேவ ஆட்டுக்குட்டி அந்த சிலுவையின் கோர காட்சியிலே தன் தாய்க்கு செய்ய வேண்டிய கடமையை ஒரு மகனாய் மிக கவனத்துடன் கவனித்துக் கொள்கிறார் . எபேசியர் : 6 :3 - இல் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்க