Posts

Showing posts from November, 2023

சிமிர்னா சபை (வெளிப்: 2:8-11) SMYRNA CHURCH

Image
  சிமிர்னா சபை ( வெளிப் : 2:8-11) வெளிப்படுத்தல் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஏழு சபைகளில் இரண்டாவது சபை சிமிர்னா . இந்த ஏழு சபைகளில் கடவுளின் நற்சாட்சி பெற்ற இரண்டு சபைகளில் ஒன்று தான் சிமிர்னா சபை . இந்த சபை எபேசுவுக்கு வடக்கே முப்பது மைல் தொலைவில் அமைந்துள்ளது . சிமிர்னா என்பதற்கு “ கசப்பு ” அல்லது “ வெள்ளைப்போளம் ” என்பது பொருள் . தன் பெயரின் பொருளுக்கு ஏற்றார்போல் இந்த சபை கிபி 150 முதல் 312 வரையிலான காலகட்டத்தில் மிகுந்த உபத்திரவத்தை கசப்பான அனுபவமாய் கொண்டிருந்தும் , கடவுளின் அன்பிற்கு  சான்றாய் நறுமணம் வீசியது . இந்த சபை அமைந்துள்ள சிமிர்னா ஒரு துறைமுக பட்டணம் . செழிப்பும், வாணிபமும், மருத்துவமும், அறிவியலும் இங்கு மிகுதியாய் காணப்பட்டன . இந்த சிமிர்னாவை தான் மேற்கத்திய நாடுகளின் நுழைவு வாயில் என்பர் . மேலும் இதனை ஆசியாவின் அணிகலன் , மணிமுடி , கிரீடம் எனவும் அழைத்தனர் . கிரேக்க நாகரீக காலத்தில் முதன் முதலில் கட்டப்பட்ட நகரம் இதுதான் . இது ரோமர்களின் காலகட்டத்தில் உலகப் புகழ்பெற்றது. இதற்கு காரணம் இப்பட்டணத்தில் கிடைக்க பெறும் வெள்ளைப்போளம் மிகுந்த வாசனை கொண்டதாய்