Posts

Showing posts from May, 2023

ELOCUTION TEACHER- கிறிஸ்துவுடன் இணைந்து வாழும் இறையரசுக்குரியோர் (1யோவான் 2:6)

Image
  கிறிஸ்துவுடன் இணைந்து வாழும் இறையரசுக்குரியோர் ( 1 யோவான் 2 :6 ) நிலைவாழ்விற்கு மாதிரியாகவும், கிறிஸ்துவுடன் ஒன்றித்து வாழ்வதற்கு சான்றாளர்களாகவும் சிறார்களை முன்னிலைப்படுத்திய இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் நடுநிலை தவறா தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும், இறையரசுக்குரியவராய் சிறார்களை பக்குவப்படுத்தும் ஆசிரியர்களுக்கும், அவையோருக்கும், சபையோருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்களும், வணக்கங்களும் . எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு “ கிறிஸ்துவுடன் இணைந்து வாழும் இறையரசுக்குரியோர் ” என்பதாகும் . இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதி 1 யோவான் 2 :6 . இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பேச ஆசிக்கிறேன் . அப்போஸ்தலராகிய யோவான் தன்னுடைய முதலாம் நிரூபத்தில் கிறிஸ்துவுடன் இணைந்து வாழும் இறையரசுக்குரியோரை குறித்தும் , கிறிஸ்துவுடன் இணைந்து வாழ்வதற்கான ஆயத்தங்களையும் அதன் ஊடாய் கிடைக்க பெறும் நன்மைகளையும் ஆலோசனைகளாய் வழங்குகிறார் . இறையரசுக்குரியோர் பாவத்தை விட்டு பரிசுத்தமாம் வாழ்வை வாழ வேண்டும்

ELOCUTION POST ADULT- நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி (நீதிமொழிகள் 4:18)

Image
  நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி ( நீதிமொழிகள் 4 : 18 ) இருளில் வாழும் ஜனங்களுக்கு பேரொளியாய் இவ்வையகத்தில் அவதரித்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் சூரியனைக் கண்ட தாமரை போல் மலர்ந்த முகத்துடன் வீற்றிருக்கும் நடுவர்களுக்கும் என்னை போன்ற போட்டியாளர்களுக்கும், அவையோருக்கும், சபையோருக்கும் என் அன்பின் வணக்கங்கள் . எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு “ நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி ” என்பதாகும் . இதற்கு ஆதாரமான திருமறை பகுதி நீதிமொழிகள் 4 : 18 . இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் . “ நீதிமான் ” என்னும் சொல்லுக்கு தமிழ் அகராதி கொடுக்கும் விளக்கம் நீதியும், நேர்மையும் உடையவர் என்பது.‌ அத்தகைய நேர்மையாளரின் பாதை நீதிமொழிகள் 4 : 18 - இன் படி நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும் என்கிறது திருமறை . ஒளிவு, மறைவில்லாத நேர்மையாளரின் வாழ்வை குறிப்பிடுகிறது இத்திருவசனம்.‌ கறை என்னும் இருளில்லா தூய வாழ்வின் பிரதிபலிப்பாகவே இவ்வொளி அமையப் பெற்றிருக்கிறது . சூரிய வெளிச்சம்

ELOCUTION ADULT- ஒன்றிப்பின் விருந்து (மத்தேயு 8:11, லுக்கா 13:29)

Image
  ஒன்றிப்பின் விருந்து ( மத்தேயு 8 : 11 , லுக்கா 13 : 29 ) மனுக்குலம் ஒன்றிப்பின் அனுபவத்தில் வளர தன்னிகரில்லா இன்னுயிரை விருந்தாக்கிய சிலுவைநாதர் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் ஒன்றிணைந்த சிந்தைக்கொண்டு நடுநிலை தவறா தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும், ஆன்றோருக்கும், சான்றோருக்கும் என்னைப் போன்ற போட்டியாளர்களுக்கும் என் அன்பின் வணக்கங்கள் . எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு “ ஒன்றிப்பின் விருந்து ” என்பதாகும் . இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதிகள் மத்தேயு 8:11, லூக்கா 13:29 . இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் . இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்து வந்த யூதர்கள் தாங்களே ஆபிரகாமின் சந்ததியார் என்றும், வாக்குத்தத்தின் புத்திரர் என்றும், பரலோக ராஜ்ஜியத்திற்கு சுதந்தரவாளிகள் என்றும் தங்கள் இருதயங்களில் பெருமைக் கொண்டு இருந்தனர் . “ இரட்சிப்பு ” என்பது இஸ்ரவேலருக்கு மட்டுமே உரியது, அதில் புறஇனத்தவருக்கு பங்கில்லை என்னும் ஆணவ சிந்தை அவர்களிடம் மிகுதியாக இருந்தது . இரட்சிப்பு யூதருக்கே உரியது என

POST SUPER SENIOR- வாழ்வெனும் கனி தரும் மரம் (நீதிமொழிகள் 3:18)

Image
  வாழ்வெனும் கனி தரும் மரம் ( நீதிமொழிகள் 3 : 18 ) எல்லா ஞானத்திற்கும் ஊற்றாகவும் ஊற்றின் கண்ணாகவும் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் இறைஞானத்தால் கனிகளை அறிந்து நடுநிலை தவறா தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும், என்னைப் போன்ற பேச்சாளர்களுக்கும், அவையோருக்கும், சபையோருக்கும் என் அன்பின் வணக்கங்கள் . எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு “ வாழ்வெனும் கனிதரும் மரம் ” என்பதாகும் . இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதி நீதிமொழிகள் 3 : 18 . இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை துணைக் கொண்டு பேச விளைகிறேன் . இறைஞானம் பெற்று , இன்றளவும் இவ்வையகம் போற்றும் மாபெரும் செயல்களை செய்தவர் தான் சாலொமோன் ஞானி . அவரைப் போன்றவர் இதற்கு முன்பும் இல்லை, இனி வரப்போவதுமில்லை என்று கடவுளால் சான்று பகிரப்பட்டவரும் இவரே . சாலொமோனின் ஞானத்தை குறித்து வியந்து, அதின் சிறப்பை அறிந்துக் கொள்ள கடல் கடந்து அவரை தேடி வந்தவர்களின் வரலாற்று சரித்திரத்தையும் திருமறை குறிப்பிட தவறவில்லை . இத்தகைய சிறப்புமிக்க சாலொமோன் ஞானி நீதிமொழிகள் 3 :18 - இல் ஞானமும்

ELOCUTION-INTERMEDIATE தீமைக்கு துணை போகா நட்புறவு (Iசாமுவேல் 18:1)

Image
  தீமைக்கு துணை போகா நட்புறவு ( I சாமுவேல் 18 : 1 ) தீமையை நன்மையினால் வென்ற இறைமகள் இயேசு கிறிஸ்துவின் இனிய நல் நாமத்தில் செந்தாமரைப் போன்று மலர்ந்த முகத்துடன் வீற்றிருக்கும் நடுவர்களே, என் போன்ற போட்டியாளர்களே, சான்றோரே பெரியோரே உங்கள் அனைவருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்கள் . எனக்கு பேசும்படியாக தரப்பட்டுள்ள தலைப்பு “ தீமைக்கு துணை போகா நட்புறவு ” என்பதாகும் இதற்கு ஆதாரமான திருமறை பகுதி I சாமுவேல் 18 - ஆம் அதிகாரம் 1- ஆம் திருவசனம் . இவற்றை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில்  பகிர்ந்து கொள்கிறேன் . நிலையில்லா உலகமதில் நிலையான நட்புறவை தேடியோடும் மனிதர்களில் உண்மை நட்புறவுக்கு அடையாளமாக பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் தாவீதும் யோனத்தானும் . இவர்கள் நட்புறவு தீமைக்கு துணை போகா நட்புறவு என்றே சொல்ல வேண்டும் . அது மட்டுமல்ல இது தீமையை நன்மையினால் வென்ற நட்புறவும் கூட . இதை தான் 1சாமுவேல் 18 : 1 - இல் யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான் என வாசி