இனி தீங்கில்லை- ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. (தி.ப:18:10)

 இனி தீங்கில்லை

திருத்தூதர் பணிகள்: 18:1-11

ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. (தி.ப:18:10)

திருத்தூதர் பணிகள்:18:1-11 வரையிலான திருமறை பகுதி அகாயாவின் தலைநகரமான கொரிந்து நகரில் தூய பவுலார் சந்தித்த சவால்களையும், அதை எதிர்கொள்ள கடவுள் கொடுத்த துணிவையும் விளக்குகிறது. கொரிந்து, ரோமர்களின் ஆட்சியின் கீழ் இரு துறைமுகங்களுக்கு இடையே அமைய பெற்றிருந்த ஒரு பட்டணம். இந்நகரம் புகழ்பெற்ற சிற்றின்ப கேளிக்கை நிறைந்த நகரமென பெயர் பெற்றது. பொழுதுபோக்கிற்கும், ஆடம்பர வாழ்விற்கும் பெரும் முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அங்கே கிழக்கத்திய- மேற்கத்திய தீயொழுக்கங்கள் ஒன்றாக கலந்திருந்தன. ரோம  சாம்ராஜ்யத்தின்   முன்னேற்ற பாதையில் வெற்றி நடை போட்ட இந்நகரம், ஒழுக்க பிரகாரமாய் சீர்குலைந்து இருந்தது. ரோம ஆட்சி காலத்தில் கொரிந்து பட்டணம் வியாபாரத்தில் மிக முக்கிய இடம் பெற்று இருந்தது. இந்த மாநகரத்திற்கு கிபி 50-யில் பவுல் தனது இரண்டாம் திருத்தூதர் பயணத்தின் போது சென்றார். அவர் அங்கே தங்கி இருந்த 18 மாத காலத்தில் திருச்சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.

கொரிந்து, ஒரு யூத குடியேற்ற நகரம், பவுல் செல்வதற்கு முன்பே அங்கு யூதர்களின் ஜெபக்கூடம் ஒன்று இருந்தது. இந்தப் பட்டணத்திற்கு வந்த பவுல் தனது வழக்கப்படி யூதர்களை நாடினார். ஆனால் மற்ற இடங்களை  போலவே இங்கும் அவரை ஏளனம் செய்தனர். யூதர்கள் பவுலை ஏற்றுக் கொள்ளவில்லை. சுவிசேஷத்தை ஏற்க மறுத்து கடினமாய் எதிர்த்தனர். எனவே புறஜாதியினரை நாடி சென்றார் பவுலார், அவர்கள் ஆவலோடு அவரையும், கிறிஸ்துவின் நற்செய்தியையும் ஏற்றுக்கொண்டனர். பலதரப்பட்ட கொரிந்தியர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டாலும், மறுபுறம் யூதர்களின் எதிர் பிரச்சாரமும், அவநம்பிக்கையும் தூண்டி விடப்பட்டது. சமூக ஏற்றத்தாழ்வு வழிபாட்டிலும் காணப்பட்டது. சிற்றின்ப வாழ்விலும், ஒழுக்க கேட்டிலும் மூழ்கியிருந்த கொரிந்து நகரில் பவுலின் திருப்பணி பயணமும் கடினமான சவாலாகவே இருந்தது. இத்தகைய அசாதாரண சூழலில், இரவிலே கர்த்தர் பவுலோடு பேசி அவரை தைரியப்படுத்தி, அவரது நற்செய்தி பயணத்தில் துணிவை ஏற்படுத்துகிறார். கடவுளின் சந்திப்பால் பவுலின் திருப்பணியில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும், அந்த உரையாடலின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட மாற்றத்தையும் திருமறை வெளிச்சத்தில் சிந்திப்போம்.

1. அச்சம் வேண்டாம்

தி.பணிகள்: 18:9-யில் அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே”. இந்த திருவசனம் பவுலின் இயல்பு நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படுத்துவதாய் அமைய பெற்றிருக்கிறது. கடவுள் மனிதர்களின் உள்ளத்தையும், உணர்வுகளையும் அறிந்து ஆராய்பவர் எனவேதான் பவுலுடனான இந்த தரிசனத்தின் ஆரம்பத்திலேயே கடவுள் பவுலின் பலவீனத்தை மாற்றி அவரது தொடர் பயணத்திற்கு தடையாக இருக்கும் பயத்தை மாற்றுகிறார். ஆங்கிலத்தில் பயத்தை எதிர்கொள்ள இரு சொற்தொடர்களை பயன்படுத்துவார்கள். FEAR- Face Everything And Rise – Forget Everything And Run. பவுலின் இயல்பு நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை அவர் புரிந்து கொள்ள கடவுள் இங்கு உதவுகிறார். பயம் பவுலின் இயல்பை மாற்றிவிட்டது, பொதுவாகவே எதையும் எவருக்கு முன்பும் தைரியத்தோடு பேசுகின்றவரின் இயல்பு நிலை மாற்றத்தை காண்கிறது. “பேசிக்கொண்டேயிரு என்ற வார்த்தை மேலும் பவுலின் இயல்பு நிலையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. Meredith Grey சொல்லும்போது Don't let fear keep you quiet. You have a voice, so use it. Speak up. Raise your hands. Shout your answers. Make yourself heard. Whatever it takes, just find your voice and when you do, fill the damn silence என்கிறார். எஸ்தர் 4: 14-இல் மொர்தெகாய், எஸ்தருக்கு கொடுத்த ஆலோசனை கூட மவுனமாயிராதபடி பேச வேண்டும் என்பதே. நம்முடைய வாழ்வின் கடின சூழல்கள் நம் இயல்புகளை முடக்க செய்வது கடவுளுக்கு சித்தமல்ல. நம்முடைய வாழ்வின் கடினங்களை கண்டு மௌனமாய் இருந்து விடாதபடி, அதனை எதிர்கொள்ளும் துணிவை தரும் கடவுளோடு நல்லுறவை தொடர்வோம்.

2. நான் உன்னோடு இருக்கிறேன்

தி.பணிகள்: 18:10 “நான் உன்னோடு இருக்கிறேன்...” இங்கு பவுலோடு கடவுளின் உடனிருத்தலை காண முடிகிறது. யூதர்களின் கடின எதிர்ப்பு, தனிமை உணர்வினை பவுலுக்கு நிச்சயமாய் ஏற்படுத்தி இருக்கும். தான் ஒருவர் மட்டுமே போராடிக் கொண்டிருப்பதை போன்ற உணர்வு கூட ஏற்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த தனிமை உணர்வின் மத்தியில்தான் கடவுள் நான் உன்னோடு இருக்கிறேன் என்று தரிசனத்தில் உறுதிப்படுத்துகிறார். இஸ்ரவேலரின் வரலாற்றை பார்க்கும் போது எங்கு எல்லாம் அவர்கள் தனிமையை உணர்ந்தார்களோ அங்கு எல்லாம் கடவுளின் திருவசனம் அவர்களுக்கு துணையாக கொடுக்கப்பட்டது. அதே வரலாற்றின் கடவுள் இங்கு இராத்திரியிலே பவுலுக்கு தரிசனமாகி தன் உடனிருத்தலை உறுதிப்படுத்துகிறார். Henry Ford கடவுளின் உடனிருத்தலை குறிப்பிடும் போது இவ்வாறு சொல்கிறார் Those who walk with God, always reach their destination.”

3. இனி தீங்கில்லை

தி.பணிகள்: 18:10 “…எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை…இத்திருவசனம் யூதர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாய் அமைகிறது. பவுலின் நற்செய்தி பயணத்திற்கு தடையும், அவரது பயத்திற்கு காரணமும் யூதர்களின் தீய எண்ணங்களே. அவர்களை குறித்த பயம் பவுலுக்கு இருந்ததின் விளைவாகவே கர்த்தர் இனி தீங்கில்லை என பவுலுக்கு உறுதியாக சொல்ல காரணமாகிறது. யூதர்களின் தீய சிந்தையின் வெளிப்பாடாக தான் தி.பணிகள்: 18:12,13-யில் யூதர்கள் ஒருமித்து, பவுலைத் தாக்கி, அவரை நடுவர் மன்றத்துக்குக் கூட்டிக் கொண்டு வந்து, இவன் திருச்சட்டத்துக்கு எதிரான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களைத் தூண்டிவிடுகிறான் என்றார்கள்.”  இங்கு பவுலுக்கு எதிராக தீமை செய்ய ஒரு மனதோடு வருகிறார்கள் யூதர்கள். ஆனால் இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பாகவே கடவுள் பவுலை ஆற்றல் படுத்துகிறார். "Avoiding danger is no safer in the long run than outright exposure. The fearful are caught as often as the bold." என்கிறார் Helen Keller. கடவுளின் நம்பிக்கையின் வார்த்தைகள் மனவலிமை இழந்துபோன நிலையில் இருந்த பவுலுக்கு மன தைரியத்தையும், பெலத்தையும் கொடுத்தது.

 

ஆ. ஜெனில் தாஸ்

Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊 

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)