ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

 பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5)

பாசம் காட்டி உலகை மீட்ட இறைமகன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீதி வழங்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும், என்னைப் போன்ற போட்டியாளர்களுக்கும், அவையோருக்கும், சபையோருக்கும் என் அன்பின் வணக்கங்கள். எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு என்பதாகும். இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதி ஆதியாகமம் 45: 5. இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பேச ஆசிக்கிறேன்.

வீடும், உறவும், சகோதர சிநேகமும் விடுபட்டு அடிமையின் கோலமாய் அந்நிய தேசமாகிய எகிப்திற்கு விற்கப்பட்டவர் தான் யோசேப்பு. ஆனாலும் ஆதியாகமம் 39:2-இன்படி கர்த்தர் யோசேப்போடே இருந்தார். என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தி ஆவார்கள் என்கிற வேதவாக்கின்படி தான் அடிமையாய் கொண்டு செல்லப்பட்ட அந்நிய தேசத்தில் உயர்த்தப்படுகிறார் யோசேப்பு. பஞ்சத்தால் தவித்த ஜனங்களுக்கு உணவு, தானியங்களை பகிர்ந்து அளிக்கும் அதிகாரம் யோசேப்பிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. யோசேப்பின் சகோதரர்களும் உணவு வேண்டி எகிப்திற்கு வருகிறார்கள். ஆனாலும் ஒருவர் கூட அவரை யோசேப்பு என்று அறிந்து கொள்ளவில்லை. அதேசமயம் யோசேப்பு அவரது சகோதரர்களை அடையாளம் கண்டுக் கொண்டார். யோசேப்பு நினைத்திருந்தால் தன் சகோதரர்கள் செய்த துரோகத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் அவரோ பகையை மறந்து பாசம் காட்டுகிறார். தன்னை யோசேப்பு என்று அறிமுகப்படுத்துகிறவர், தன் சகோதரர்களின் மன சஞ்சலத்தையும் அறிந்து ஆறுதலாய் பேசுகிறார் என்பதை ஆதியாகமம் 45:5-இல் காண முடிகிறது. தன்னை பகைத்து வெறுத்த சகோதரர்களுக்கு யோசேப்பு ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் விளங்குகிறார். மனிதன் கைவிடும் நேரத்தில் கடவுளின் கரம் அவரை நம்புவோரை பற்றிக் கொள்ளும் என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு.

இன்றைய நவீன உலகின் மனிதர்கள் தங்கள் ஆபத்து காலத்தில் அனுகூலமான துணையான கடவுளை மறந்து, உலகம் தரும் அடைக்கலம் தேடி ஓடுகிறார்கள். வருட கணக்கில் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளோடும், பெற்றோரோடும், உறவினர்களோடும் பேசாமலும், அவர்கள் குற்றங்களை மன்னிக்க மனதில்லாது கடின இருதயத்தோடும் இருப்பவர்கள் பலர் உண்டு, அத்தகையோருக்கு யோசேப்பின் வாழ்வும், அவர் அருளின மன்னிப்பும், பகையை மறந்து பாசம் காட்டும் விதமும் சிறந்த வாழ்க்கைப் பாடம். எனவே நாமும் பிறருக்கு மன்னிப்பு வழங்கி, பிறரோடு நல்லுறவை வளர்ப்போம் எனக் கூறி என் உரைக்குத் திரையிடுகிறேன். ஆமென்.


Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊



Comments

  1. Sir i want senior elocution

    ReplyDelete
    Replies
    1. https://www.jdscribble.com/2023/05/elocution-senior-1012.html

      Delete
  2. Sir i want teachers elocution

    ReplyDelete
    Replies
    1. https://www.jdscribble.com/2023/05/elocution-teacher-1-26.html

      Delete
  3. https://www.jdscribble.com/2023/05/elocution-teacher-1-26.html

    ReplyDelete
  4. Sir we want 2024 elocation

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)