Posts

Showing posts from September, 2021

ONLINE EDUCATION - A CHAIN

Image
  ஆன்லைன் வகுப்பு (online class) என்னும் சங்கிலி பெரும்பாலானோருக்கு பொழுதுபோக்கிற் கு பயன்படுத்தப்பட்டு வந்த இணையதள பயன்பாடு , தற்காலச் சூழலில் பொழுது விடிந்ததும்   தவிர்க்க முடியாத அவசியமாய் மாறிவிட்டது . covid-19 பெருந்தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் கல்வி தொடர்ச்சியை பெரும் பொருட்டு அரசாங்கமும், கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் கல்வியை ஊக்குவித்து வருகின்றன . Zoom, Google classroom, Microsoft teams, போன்ற ஆன்லைன் தளங்கள் மற்றும் செயலிகள் (applications) இதற்கு பெரிதும் உதவுகின்றன .   ஆன்லைன் கல்வியின் சவால்கள் பன்முகத்தன்மை கொண்டவை , அதேசமயம் ஆன்லைன் கல்வி விதிமுறைக்கு அப்பாற்பட்ட ஒன்றை கற்றுக் கொள்ள அனுமதிக்கிறது . எங்கும் செல்லாமல் ஒருவர் வசிக்கும் இடத்திற்கே கல்வியை இது அழைத்து வந்திருக்கிறது . கடுமையான கால அட்டவணைகள் (time table) மாற்றம் பெற்றுள்ளன. கல்வி பயில பேருந்துகளிலும் , வாகனங்களிலும் பயணித்த மாணவர்கள் தினசரி பயணங்களி லி ருந்து சற்று ஓய்ந்து இருக்கிறார்கள் .   இவை ஆன்லைன் கல்வியின் நன்மைகளாய் சொல்லப்பட்டாலும் இதி லி ருக்கிற தீமைகளு