பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH
பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை “ கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் ” என்கிற திருவார்த்தையை நினைவில் கொண்டு , சிறப்புமிக்க இப்பள்ளியின் ஆண்டுவிழாவில் வாழ்த்துரை வழங்குவதில் பெ ரு ம் மகிழ்ச்சி கொள்கிறேன் . இந்த வாய்ப்பினை நல்கி இருக்கிற பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய இப்பள்ளியின் தாளாளர் , தலைமை ஆசிரியர் , அலுவலக பணியாளர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர் மற்றும் மாணவ மாணவியரை உள்ளத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்தி வணங்குகிறேன் . “மாதா , பிதா , குரு , தெய்வம்” என்பதற்கிணங்க நமது பெற்றோருக்கு அடுத்தபடியாக நம்மை வழிநடாத்துபவர்கள் ஆசிரியர்களே. நல்ல குருவை அடைந்தவர்களே சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவர் என்று சொல்வதுண்டு. நம் பெற்றோர்களுக்கு அடுத்து ஒழுக்கத்தையும், அறிவையும் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பள்ளிக்கூடம் தான் . பல அறிஞர்களையும் , கவிஞர்களையும் , மேதைகளையும் , மருத்துவர்களையும் , விளையாட்டு வீரர்களையும் , சாதனையாளர்களையும் , விஞ்ஞானிகளையும் இந்த உலகிற்கு அறிமுகப் படுத்துவது பள்ளியும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாத...