திருவருட்சாதனங்கள் - Christian Sacraments: An Introduction
திருவருட்சாதனங்கள் (Sacraments)
_-_geograph.org.uk_-_1545201.jpg)
Sacrament - “Sacramentum”
என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து பிறந்தது. Secret
(ரகசியம்), Sacred (பரிசுத்தம்) முதலிய வார்த்தைகள் இதனோடு தொடர்புடையவை. படைக்கு தலைமை ஏற்கும் தளபதி முன்பு
எடுத்துக் கொள்ளும் இரகசிய காப்புபிரமாணமே “சாக்கிரமந்து”.
கிறிஸ்தவ
கண்ணோட்டத்தில் திருவருட்சாதனங்கள் (Sacraments)
என்பது கிறிஸ்து
நமக்காக செய்தவற்றை, நம் வாழ்வில் உண்மையாக்கி, நம்மை தெளிவான வழியில் நடத்திச்
செல்வதற்கு இது வெளி அடையாளங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள்
கடைபிடிக்கவேண்டிய ஆன்மீக கடமையை சித்தரிக்கிறது திருவட்சாதனம். இது உள்ளார்ந்த
ஆன்மீக அருளினை குறித்த வெளிப்படையான அடையாளம். “கடவுளின் கிருபையை நேரடியாக பெற்றுக் கொள்வதின் அடையாளமாக”- St.
அகஸ்டின்
கூறுகிறார். வேதத்தில் சாக்கிரமந்து என்னும் சொல் இடம் பெறவில்லை.
ரோமன்
கத்தோலிக்க (Roman Catholic) சபை 7 திருவருட்சாதனங்களை
பின்பற்றுகின்றன:
1. திருமுழுக்கு
(Baptism)
2. திருவிருந்து
(Eucharist)
3. திடப்படுத்துதல்
(Confirmation)
4. திருமணம்
(Marriage)
5. அருட்பொழிவு
(Ordination)
6. பாவமன்னிப்பு
(penance)
7. எண்ணெய்
பூசுதல் (Unction)
சீர்திருத்தசபைகள் (Protestant)
2 திருவருட் சாதனங்களை
பின்பற்றுகின்றன:
1.
திருமுழுக்கு (Baptism)
2.
திருவிருந்து (Communion\ Eucharist)
C.S.I
திருச்சபை இரு
திருவருட்சாதனங்களை பயன்படுத்தப்படுகிறது.
v திருமுழுக்கு
(Baptism)
v திருவிருந்து
(Communion\Eucharist)
Salvation
Army (இரட்சணிய
சேனை) – திருவருட்சாதனங்கள் தேவை இல்லை.
திருவருட்சாதனைத்தை பற்றிய
கருத்துகள்:
Ø திருமுழுக்கு
or ஞானஸ்நானம் (Baptism):
ஞானஸ்நானம்
என்ற புனித அடையாளம் (symbol) அனைத்து கிறிஸ்தவர்களையும்
அடையாளம் காட்ட உதவும் புனிதச் சடங்கு (Ritual).
ஞானஸ்நானம் என்ற
புனிதச் சடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது, அதேசமயம் அதன் உட்பொருளுக்கு (baptismal
life) அதிக
முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
Ø திருவிருந்து
(Communion\Eucharist):
திருவிருந்து இயேசுவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் முதலியவற்றை நினைவுகூரவும் (1 கொரி.11:24) கிறிஸ்து வருமளவும் இதனை நடப்பிக்கவும் (1 கொரி.11:26) கூறி இவைகளை முக்கியத்துவப்படுத்தி, இதனை ஸ்தாபித்தார் இயேசு (He instituted).
ஆ. ஜெனில் தாஸ்
Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊
Comments
Post a Comment