UNITY IN DIVERSITY TOKYO 2020 I வேற்றுமையில் ஒற்றுமை டோக்கியோ ஒலிம்பிக் 2020

வேற்றுமைகளை ஒப்புக்கொண்டு ஒற்றுமைக்கு இலக்கணமான டோக்கியோ ஒலிம்பிக் 2020 விளையாட்டு உலகின் திருவிழா என்றால் அது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தான். இந்த வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை “TOKYO 2020” என்ற தலைப்பில் நடைபெற்றது . இது மாடர்ன் ஒலிம்பிக்கின் 32- வது விளையாட்டுப் போட்டியாகும். ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் பெரும் ஒவ்வொரு வெற்றியும் நாட்டின் வெற்றியாக பங்குபெறும் நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட ஒலிம்பிக் போட்டிகளில் 205 உலக நாடுகள் சார்பாக சுமார் 11300- க்கும் அதிகமான வீரர்கள் 33 விளையாட்டுகளைச் சேர்ந்த 339 நிகழ்வுகளில் பங்கு பெற்றனர். இந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் வேற்றுமை களை ஒப்புக்கொண்டு ஒற்றுமைக்கு இலக்கணமான சில சுவாரசியமான நிகழ்வுகளும் நடந்தேறியது. அகதிகள் ஒலிம்பிக் அணி : (Refugee Olympic Team) வறுமை , வன்முறை , போர், பயங்கரவாதம், என பல காரணங்களுக்காக தங்கள் தாய்நாட்டை பிரிந்து வேறு ஒரு நாட்டுக்கு அடைக்கலம் நாடி செல்பவர்களே அகதிகள். அப்படி தங்கள் தாய்நாட்டை விட்டு வேறு நாட்டுக்...