புனித வெள்ளி முகவுரை GOOD FRIDAY INTRODUCTION

புனித வெள்ளி முகவுரை விசாரனை கெஞ்சமனே தோட்டத்தில் முந்தைய நாள் இரவு யூதாஸ் அன்பின் அடையாளமாம் முத்தத்தினால் இயேசுவை காட்டிக் கொடுக்கிறான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு சரித்திரத்தை புரட்டிப் போட்ட நிகழ்வு அது. அன்னா கிபி . 15 வரை பிரதான ஆசாரியனாய் இருந்தவர். மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தார். பிரதான ஆசாரியன் காய்பாவின் மாமன் என்கிற தகுதி தவிர வேறு எதுவுமில்லை. இயேசுவின் விசாரணையின் போது அவர் பிரதான ஆசாரியனாக இல்லை . மக்களுக்கு இவர் மீது இருந்த மதிப்பினாலும் , காய்பாவின் விசாரனைக்கு உதவி செய்யவும் அன்னா , இயேசுவிடம் குற்றம் கண்டு பிடிக்க முயல்கிறார். அன்னாவின் வீட்டில் வைத்து தான் முதல் அடி இயேசுவுக்கு விழுந்தது. இது Against law காரணம் விசாரணையின் போது எந்தவொரு குற்றவாளியையும் அடிக்க கூடாது . காய்பா இவர் ஒரு பிரதான ஆசாரியன். ரோமர்களுடன் நல்லுறவை கொண்டிருந்தார் . தன் காரியத்தை சாதிக்க எந்த எல்லை வரையிலும் துணிந்து செல்லும் குணம் கொண்டவர் . இரட்டை வேடம் போடும் மனிதன். இவர் ஒரு ’பச்சோந்தி’ இயேசுவுக்கு தண்டனை வழங்க வேண்டும், அவரை கொலை செய்ய வ...