புனித வெள்ளி முகவுரை GOOD FRIDAY INTRODUCTION

 புனித வெள்ளி முகவுரை

விசாரனை

கெஞ்சமனே தோட்டத்தில் முந்தைய நாள் இரவு யூதாஸ் அன்பின் அடையாளமாம் முத்தத்தினால் இயேசுவை காட்டிக் கொடுக்கிறான்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு சரித்திரத்தை புரட்டிப் போட்ட நிகழ்வு அது.

அன்னா

கிபி.15 வரை பிரதான ஆசாரியனாய் இருந்தவர்.

மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தார்.

பிரதான ஆசாரியன் காய்பாவின் மாமன் என்கிற தகுதி தவிர வேறு எதுவுமில்லை. இயேசுவின் விசாரணையின் போது அவர் பிரதான ஆசாரியனாக இல்லை.

மக்களுக்கு இவர் மீது இருந்த மதிப்பினாலும், காய்பாவின் விசாரனைக்கு உதவி செய்யவும் அன்னா, இயேசுவிடம் குற்றம் கண்டு பிடிக்க முயல்கிறார்.

அன்னாவின் வீட்டில் வைத்து தான் முதல் அடி இயேசுவுக்கு விழுந்தது.

இது Against law காரணம் விசாரணையின் போது எந்தவொரு குற்றவாளியையும் அடிக்க கூடாது.

காய்பா

இவர் ஒரு பிரதான ஆசாரியன். ரோமர்களுடன் நல்லுறவை கொண்டிருந்தார்.

தன் காரியத்தை சாதிக்க எந்த எல்லை வரையிலும் துணிந்து செல்லும் குணம் கொண்டவர்.

இரட்டை வேடம் போடும் மனிதன். இவர் ஒரு ’பச்சோந்தி’

இயேசுவுக்கு தண்டனை வழங்க வேண்டும், அவரை கொலை செய்ய வேண்டும் என்பதை இயேசுவின் விசாரணைக்கு முன்பே மனதில் நினைத்திருந்தார்.

இதன் காரணமாக தான் இயேசுவை குறித்து சொல்லும் போது:

(1) தேவதூஷனம் சொன்னான்.

(li) ராஜ துரோகம் செய்தான்.

(iii) எருசலேம் ஆலயத்தை இடிப்பேன்.

என்பன போன்ற குற்றசாட்டுகளை இயேசுவின் மீது துணிந்து சுமத்தினார்.

ஆனால் சாட்சிகள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாய் இருந்ததால் இயேசுவின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டது.

இது Against law குற்றவாளி மீது, ரோம சட்டப்படி குற்றவாளிக்கு எதிராக எந்த ஒரு பொய்சாட்சி சொன்னாலும் உடனே அந்த நபர் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால் இங்கோ அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

காய்பா இயேசுவிடம் கேள்வி கேட்கிறார் நீ கிறிஸ்து தானா? அவர் எதிர் பார்த்தபடியே ஆம் என்னும் பதில் இயேசுவிடமிருந்து வந்தது.

உடனே காய்பா தன் வஸ்திரத்தை கிழித்துக் கொண்டு, இயேசுவை குற்றவாளி என முடிவு சொல்கிறார்.

அவரது ஆதரவாளர்கள் இயேசுவை சிலுவையில் அறைய சத்தமிட்டனர்.

விசாரளை சங்கத்திற்கு இயேசுவின் மீது குற்றம் சாட்டி அனுப்புகிறார்.

மாற்கு: 14:65- இயேசுவை சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

சனகெரிம் or விசாரனை சங்கம்

வறை சுட்டிக்காட்ட துணி இல்லாத  Council.

இந்த சங்கம் 71 நபர்களை அங்கத்தினர்களாக கொண்டிருந்தது.

கள்ளர் கூட்டத்தை சார்ந்த வேதபாரகர், மூப்பர், பரிசேயர், சதுசேயரை அங்கத்தினர்களாக கொண்டிருந்தது.

ஒரு குற்றவாளி மீது விசாரணை நடத்துவதற்கும், தீர்ப்பு வழங்குவதற்கும் குறைந்தது 23- பேர் இருக்க வேண்டும்.

பிரதான ஆசாரியன் தான் இதற்கு நீதி தலைவர்.

ஆனால் இயேசுவின் விசாரணையின் போது நடந்தது சட்டத்திற்கு எதிரானது காரணம், ஒருவரை குற்றவாளி என் அறிவிக்க அறிவிக்க இரண்டு பேரின் சாட்சி வேண்டும். இங்கு இயேசுவுக்கு எதிராக ஒரு சாட்சி கூட இல்லை.

யாரும் இயேசுவின் மீது புகார் சொல்லவோ குற்றம் சற்றவோயில்லை. ஆனாலும் இயேசு கைது செய்யப்படுகிறார்.

குற்றவாளியிடம் அவரது தரப்பு கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். ஆனால் இங்கு அது நடைபெறவில்லை.

தீர்ப்பு மறுநாள் தான் வழங்கப்பட வேண்டும். ஆனால் இங்கு அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

விசாரனைக்கு முன்பு யாரேல்லாம் சாட்சிகள் என்று அறிவிக்க வேண்டும், ஆனால் இது எதுவும் இங்கு நடைபெறவில்லை.

ஆக மொத்தத்தில் இந்த சங்கம் ரத்த வெறியர்களின் சங்கமமாய் இயேசு கிறிஸ்துவின் விசாரணையின் போது செயல்பட்டது.

பிலாந்து: (சமாரியா யூதேயா கவர்னர்)

இவர் ஒரு சுயநலவாதி, தன் பதவியை காத்துக்கொள்ள நீதி சரிந்து விழ செய்தவர்.

பாஸ்கா பண்டிகையின் போது பாதுகாப்பிற்காக வந்திருந்தார்.

யூதேயாவின் கவர்னர் இவர் எனவே எருசலேம் இவரது கட்டுபாட்டில் இருந்தது.

இவர் ரோமன், யூதன் அல்லாத புற ஜாதியான். யூதர்களின் வெறுப்பையும் பெற்றிருந்தவர்.

இவரது அரண்மனைக்கு உள் சென்றால் தீட்டு, எனவே இயேசுவின் மீதான விசாரணை அவரது வீட்டின் முற்றத்தில் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை யூதர்களின் ஓய்வுநாள் எனவே மாலை 6:00 மணிக்கு முன்பு மரண தண்டனை கொடுத்தாக வேண்டும் என்பது யூதர்களின் விருப்பம்.

பிலத்து எந்தவொரு குற்றமும் இயேசுவிடம் காணவில்லை.

அதேசமயம் இயேசு கலிலேயன் என்பதால் அவரை விசாரணைக்காக ஏரோதிடம் அனுப்பினார். 

ஏரோது (தேசாதிபதி)

இயேசுவை குறிந்து நன்றாய் அறிந்தப்படியால் அவரை பார்க்க விரும்பியவர் ஏரோது.

இயேசு ஒருமுறை இவரை நரி என்று கூறியிருக்கிறார்.

இயேசுவிடம் பேசியவர் அவரில் எந்த குற்றமும் காணவில்லை.

இவரது அம்மா யூத பெண், எனவே இவர் பாதி ரோமர்/ பாதி யூதன், எனவே இவருக்கு ரோமர்களை போல முழு அதிகாரம் இல்லை.

யூதர்கள் இயேசுவுக்கு சிலுவை மரண தண்டனை வழங்கும்படி கேட்டதால், அதை ரோம ஆளுநர் தான் கொடுக்க முடியும் என்று மறுபடியும் பிலாத்துவிடம் அனுப்பினார்.

இவரே இயேசுவுக்கு மினுக்கான உடை உடுத்தி, பரியாசம் செய்து வெளியே அனுப்பினார்.

மற்றவரின் ஆள் தத்துவத்தை குற்றப்படுத்த Ph.D. பெற்றிருந்தார்.

பிலாந்து இறுதி விசாரணை

இவருக்கு இயேசுவை விடுவிக்க ஆசை.

எனவே Option ஒன்றை கொடுக்கிறார் யாரை விடுதலை செய்வது இயேசு/பரமாஸ்??? மக்களே முடிவெடுக்கும் வாய்ப்பினையும் வழங்குகிறார்.

தண்டித்து விடுதலை செய் நினைத்து. 39 சாட்டை அடி கொருக்க உத்தரவிடுகிறார்.

அதேசமயம் 40 சாட்டையடி கொடுத்திருந்தால் ரோம சட்டத்தின்படி இயேசு மரண தண்டனையிலிருந்து தப்பி இருப்பார். இங்கு பிலாத்துவும் இயேசுவுக்கு எதிராக ஏதோ ஒரு முறையில் செயல்படுகிறார்.

இறுதியில் கைகளை கழுவி இயேசுவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார்.

இயேசு அறையப்பட்ட சிலுவை

எடை: 150 kg

நீளம் : 15 அடி

அகலம்: 14 அடி

ஆணியின் நீளம்: 8 அங்குலம்

அகலம்: 3/4அங்குலம்

இயேசு பற்றி

உயரம்: 5 அடி 11 அங்குலம்

எடை : 85 kg

3 முறை தடுமாறி விழுந்தார். 17 மணி நேரம் தண்ணீர் இன்றி தவித்தார்.

மொத்த காயம் : 5480

முதுகில் : 150 ஆழமான காயம்

தலையில்: 7 முட்கள்.

சேவர்கள்கள்: 350

குதிரை வீரர்கள்: 50

இயேசுவின் மரண தேதி

யூத கால அட்டவணையின்படி: அக் ஆபூர்வே கோன்கீதா:785

நிசான் 15 தேதியன்று.

நாம் பின்பற்றும் அட்டவனை:

கி.பி: 30-ம் ஆண்டு ஏப்ரல்:7 இயேசு மரித்தார்.

INRI

I – JESUS

N- NAZARINE

R- REXO

 I- IDONEUS

பொருள்:

நசரேயனாசிய இயேசு யூதருக்கு ராஜா


A. JENIL DHAS


Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊

 

Comments

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)