இறைமாட்சியை வெளிப்படுத்தும் இறையரசுக்குரியோர்

இறைமாட்சியை வெளிப்படுத்தும் இறையரசுக்குரியோர் ( மத்தேயு 21:16) இறையரசுக்குரியோரால் தாவீதின் மைந்தன் என போற்றப்படும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற இனிய நல்நாமத்தை போற்றி , நீதியாய் நியாயம் தீர்க்க வீற்றிருக்கும் நடுவர்களை வணங்கி , என் போன்ற போட்டியாளர்களை வாழ்த்தி , அவையோருக்கும், சபையோருக்கும் வணக்கம் சொல்லி, “ இறைமாட்சியை வெளிப்படுத்தும் இறையரசுக்குரியோர் ” என்னும் தலைப்பில் , என் சிந்தையில் எழுந்த கருத்துகளை திருமறை வெளிச்சத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . இதற்கு ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ள திருமுறைப்பகுதி தூயமத்தேயு எழுதிய நற்செய்தி நூல் 21 - ஆம் அதிகாரம் 16 - ஆம் திருவசனம் . இந்த திருமறை பகுதியில் இறையரசுக்குரியோராய் அடையாளப்படுத்தப் படுகிறவர்கள் பாலகரும், குழந்தைகளுமே . ஆம் ! இவர்களே இறைவனின் பிரதிநிதிகள், குழந்தைகள் இறைவன் கொடுக்கும் வரம் , இவர்களே இறையரசின் பங்காளர்கள் என்பதை மாற்கு 10:14 - இல் சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் ; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள் ; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி ஆண்டவர...