குழந்தைகளிடம் எப்படி பேசுகிறோம்? எப்படி நடந்து கொள்கிறோம்? APPROACH TOWARDS CHILDREN
குழந்தைகளிடம் எப்படி பேசுகிறோம்? எப்படி நடந்து கொள்கிறோம்? எதிர்பார்ப்பதை குழந்தைகள் செய்யாதபோதோ! கோபம் ஏற்ப்படுத்தும் செயல்களை செய்யும்போதோ! சற்றும் யோசிக்காமல் அவர்களுக்கு எதிராய் பயன்படுத்தும் வார்த்தைகள் தான் வாயாடி, பிடிவாதக்காரன், முட்டாள், யோகம் இல்லாதவன், திருடன் … போன்றவை. அதிலும் குறிப்பாக “ முட்டாள் ” என்ற வார்த்தையை ஒருமுறையாவது பிறரிடத்திலிருந்து கேட்காமல் வாழ்வில் கடந்து வந்தவர்கள் ஒருவருமே இருக்க முடியாது . இத்தகைய “ வார்த்தை முத்திரைகள் ” குழந்தைகள் மீது தொடுக்கப்படும் ஒரு வகையான “ வன்முறை ” கலந்த தவறாகும் . இத்தகைய வார்த்தைகள் குழந்தைகளை காயப்படுத்துவதோடு நின்றுவிடாமல் , பிறர் சொல்வதை போன்றுதான் நான் இருக்கிறேனோ! என்கிற மன சோர்வையும், மன குழப்பத்தையும் ஏற்படுத்திவிடுகிறது . தங்கள் தன்னம்பிக்கையை இழக்க செய்யும் அவல நிலைக்கு குழந்தைகளை கொண்டு சென்றுவிடுகிறது . சமீபகாலமாக, நீட் (NEET) தேர்வுக்கு பயந்து தற்கொலை போன்ற செய்திகள் சுலபமாக கடந்து செல்லக்கூடிய ஒன்றாக இல்லை . இது குழந்தைகளின் எதிர்கால நலன் குறித்த அச்சத்தை தான் ஏற்படுத்துகிறது . இதற்கான காரணங...