அனைவருக்கும் சமத்துவமும், நீதியும் - Equality and Justice to all
அனைவருக்கும் சமத்துவமும் , நீதியும் குடியரசு தினம் ( தியான வசனம் : சங்கீதம்: 97:2 ) உலக வரலாற்றில் மன்னர் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி, மக்களாட்சி என்று பல்வேறு விதமான ஆட்சி முறைகள் காணப்படுகின்றன . இதில் மக்களாட்சி முறையே சிறந்தது என்பதை இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் Vincent Churchill- “ மானுடம் கண்டுள்ள ஆட்சி முறைகளில் ஜனநாயக ஆட்சி முறையே குறைந்த தீமைகளை கொண்டுள்ளது ” என்று குறிப்பிடுகிறார் . 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் புதிய அரசியலமைப்பு சட்டங்களுடன் இந்தியா தன்னை ஒரு குடியரசு நாடாக அறிவித்தது. இதனால் , உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு, குடியாட்சி தத்துவத்தை செயல்படுத்தும் ...