எங்கும் எதிலும் பெண்கள்- WOMENS' SUNDAY 2025

எங்கும் எதிலும் பெண்கள் எண்ணாகமம் 27:1-11 2தீமோத்தேயு.1:1-8 லூக்கா 2:40-52 மண் தொடங்கி விண் வரையிலும் பெண்கள் எல்லா துறைகளிலும் வளர்ந்து உயர்ந்து நிறைந்து இருக்கிறார்கள் . தாய் திருநாடு , தாய் திருச்சபை , பூமித்தாய் , கடல் தாய் , நீதியரசி , மணவாட்டி சபை என சமூக , சமய , அரசியலிலும் பெண்கள் நிறைந்திருக்கிறார்கள் , முதன்மைப்படுத்தப்படுகிறார்கள் . அன்றாட வாழ்வில் பெண்களை மையப்படுத்தி பல சட்டங்களும் திட்டங்களும் கொண்டுவரப்படுகின்றன . பெண்கள் உரிமைக்கான பல குழுக்ககளும், அமைப்புகளும் உலகம் முழுவதும் நிறைந்துள்ளன . அதேசமயம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது . காலங்காலமாகத் தொடரும் அவலம்தான் என்றாலும், அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய நவீன நாட்களில் இன்னும்...