Sermon on Seventh verse on the Cross

“ ஒப்படைப்பு ” சிலுவைநாதர் இயேசு கிறிஸ்துவின் திருவாயால் அருளப்பட்ட ஏழாவது திருமொழி “ ஒப்படைப்பு ” இதற்கு ஆதாரமான திருமறை வசனம் லூக்கா 23:46. இயேசு: பிதாவே , உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார் ; இப்படிச் சொல்லி , ஜீவனை விட்டார். இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளில் முதலும், நடுவும், இறுதியுமான வார்த்தைகள் பிதாவை மையப்படுத்தி அல்லது பிதாவினிடத்தில் பேசுகிற வார்த்தைகளாய் அமையப் பெற்றிருக்கின்றன . எத்தனையோ எதிர்ப்புகள், தவறான குற்றச்சாட்டுகள், வீண்பழிசுமைகள், எத்தனையோ குறுக்கு விசாரணைகள், கையினாலும், வாரினாலும் அடித்த காயங்கள் அப்போதெல்லாம் அமைதியோடு இருந்தவர் இத்தனை காரியங்களையும் தனக்கு எதிராய் செய்பவர்களுக்காக தன் பிதாவினிடத்தில் மன்னிப்பை வேண்டினார். இறுதியாக பிதாவை அழைத்து தன் ஆவியை ஒப்புக் கொடுக்கிறார் . பொதுவாக சிலுவை தண்டனை பெற்றவர்கள் தன்நிலை மறந்து, பதட்டமும், பயமும் நிறைந்தவராய், நிதானமிழந்து தான் சிலுவையில் பேசுவார்கள் . முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகள் தான் அதிகம் இருக்கும் . ஆனால் இந்த நடைமுறை அ...