ELOCUTION 2024- TEACHER விண்ணரசின் மாதிரியாகும் சிறார்கள் (மத்தேயு 18:3)

விண்ணரசின் மாதிரியாகும் சிறார்கள் ( மத்தேயு 18 :3) விண்ணரசின் மாதிரிகளாக்க விண்ணக வாழ்வை துறந்து மண்ணுலக வாழ்வை ஏற்ற இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் நடுநிலை தவறா தீர்ப்பு வழங்குவதற்கு மாதிரியாக அமர்ந்திருக்கும் நடுவர்களை வணங்கி , என்னைப் போன்ற போட்டியாளர்களுக்கும் சபையோருக்கும் அவையோருக்கும் வணக்கம் சொல்லி விண்ணரசின் மாதிரியாகும் சிறார்கள் என்ற தலைப்பில் மத்தேயு 18 :3- யை ஆதாரமாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன் . இயேசுவின் சீடர்கள் அவர் வழியாக விண்ணரசின் தகவுகளை அநேகமுறை கேட்டிருக்கிறார்கள் . அதோடு மட்டும் நின்று விடாமல் பரலோக ராஜ்யத்தை குறித்து பல நிலைகளில் பிரசங்கிக்கவும் செய்திருக்கிறார்கள் . ஆனால் மத்தேயு 18 :1- இல் “ பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் ” என்கிற சீடர்களின் கேள்வியிலிருந்து விண்ணரசைக் குறித்த காரியங்களில் அவர்களுக்கு இருந்த தெளிவின்மையை புரிந்துக்கொள்ள முடிகிறது . மத்தேயு 18 - ஆம் அதிகாரத்தில் இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்குமான உரையாடலின் போது எழுப்பப்பட்ட இந்...