ELOCUTION TEACHER- கிறிஸ்துவுடன் இணைந்து வாழும் இறையரசுக்குரியோர் (1யோவான் 2:6)

கிறிஸ்துவுடன் இணைந்து வாழும் இறையரசுக்குரியோர் ( 1 யோவான் 2 :6 ) நிலைவாழ்விற்கு மாதிரியாகவும், கிறிஸ்துவுடன் ஒன்றித்து வாழ்வதற்கு சான்றாளர்களாகவும் சிறார்களை முன்னிலைப்படுத்திய இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் நடுநிலை தவறா தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவர்களுக்கும், இறையரசுக்குரியவராய் சிறார்களை பக்குவப்படுத்தும் ஆசிரியர்களுக்கும், அவையோருக்கும், சபையோருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்களும், வணக்கங்களும் . எனக்கு இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு “ கிறிஸ்துவுடன் இணைந்து வாழும் இறையரசுக்குரியோர் ” என்பதாகும் . இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதி 1 யோவான் 2 :6 . இதனை அடிப்படையாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பேச ஆசிக்கிறேன் . அப்போஸ்தலராகிய யோவான் தன்னுடைய முதலாம் நிரூபத்தில் கிறிஸ்துவுடன் இணைந்து வாழும் இறையரசுக்குரியோரை குறித்தும் , கிறிஸ்துவுடன் இணைந்து வாழ்வதற்கான ஆயத்தங்களையும் அதன் ஊடாய் கிடைக்க பெறும் நன்மைகளையும் ஆலோசனைகளாய் வழங்குகிறார் . இறையரசுக்குரியோர் பாவத்தை விட்டு பரிசுத்தமாம் வாழ்வை வாழ வேண்...